தாராபுரத்தில் கர்நாடகாவில் அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிவதற்கு தடைசெய்ய கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து தாராபுரம் ஒருங்கிணைந்த முஸ்லிம் மாணவர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று தாராபுரம் அண்ணா சிலை முன்பு நடைபெற்றது. மத உரிமையை பறித்த கல்லூரி நிர்வாகத்தையும், மத்திய பா. ஜனதா அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைந்த இஸ்லாமிய மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவர் நவாஸ் தலைமை தாங்கினார். இதில் தாராபுரம் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.