வாளையாறு அருகே 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

வாளையாறு அருகே 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2022-02-25 14:29 GMT

கோவை

கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 இந்த நிலையில் பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு ஆய்வாளர் கோபிநாத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன், ஏட்டு காளிமுத்து, கோபு ஆகியோர்  கோவை-பாலக்காடு ரோடு வாளையார் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தினர். உடனே லாரியை ஓட்டி வந்த கேரளாவை சேர்ந்த டிரைவர் ஏசுராஜ் தப்பி ஓடி விட்டார்.

 இதையடுத்து லாரியை சோதனை செய்த போது அதில் 28 சாக்கு மூட்டைகளில் 1¼ டன் ரேஷன் அரிசி இருந்தது. 

இதையடுத்து ரேஷன் அரிசி மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவர் ஏசுராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்