நெல்லையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்
நெல்லை:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட துணை தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லயோலா ஜோசப் ஆரோக்கியதாஸ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அரசு வேளாண்மை பட்டதாரிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் மணிகண்ட உலகநாதன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் பரமசிவம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் குமாரவேல் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். வளர்ச்சித் திட்டங்களை நேர்மையான முறையில் செயல்படுத்த ஊக்கப்படுத்திட வேண்டும். வளர்ச்சித் திட்டங்களை இலக்கு சார்ந்த திட்டமாக செயல்படுத்துவதை கைவிட வேண்டும். பிற துறை பணிகள் மேற்கொள்ள நிர்ப்பந்தம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபுத்திரன் நன்றி கூறினார்.