சிறுமியை பலாத்காரம் செய்தவர் போக்சோவில் கைது

சிறுமியை பலாத்காரம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-02-24 21:49 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகில் உள்ள சிலம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மகன் சின்னத்தம்பி(வயது 26). கூலி தொழிலாளி. இவர், 10-ம் வகுப்பு படித்த 15 வயது சிறுமியிடம் தன்னை காதலிக்க கூறி வற்புறுத்தியுள்ளார். அதற்கு சிறுமி ஒப்புக்கொள்ளாத நிலையில், அவரை மிரட்டியதாகவும், சில மாதங்களுக்கு பின்னர் சின்னத்தம்பி, அந்த சிறுமிைய பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து சின்னத்தம்பியை கைது செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்