முனைஞ்சிப்பட்டியில் வீடுபுகுந்து தங்க நகைகள் திருட்டு

வீடுபுகுந்து மர்மநபர் தங்க நகைகள் திருடி சென்று விட்டார்

Update: 2022-02-24 21:42 GMT
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே முனைஞ்சிப்பட்டி யாதவர் சங்க தெருவைச் சேர்ந்தவர் முத்து மனைவி செண்டு (வயது 45). இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று மகன் பள்ளிக்கு சென்று விட்டான். மகள் வெளியில் சென்றுள்ளார். செண்டு பக்கத்து வீட்டில் துணி துவைக்க சென்றார். அப்போது அவரது வீடு சரியாக பூட்டப்படாமல் திறந்து கிடந்தது. இதைக் கண்ட மர்மநபர் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 தங்கமோதிரம், 2 ஜோடி கம்மல் உட்பட 12 கிராம் தங்க நகையை திருடி சென்று விட்டார். இதுகுறித்து செண்டு மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்