நெல்லை :
நெல்லை மாநகர போலீஸ் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன், மேலப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சாமி ஆகியோர் குறிச்சி பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது மேலப்பாளையம் அக்பர் தெருவை சேர்ந்த ஜாபர் சாதிக் (வயது 26) என்பவரை சோதனை செய்ததில் 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாபர் சாதிக்கை கைது செய்தனர். கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.