குமரி மாவட்டத்திற்கு 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை

சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Update: 2022-02-24 21:27 GMT
நாகர்கோவில், 
சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியையொட்டி சிவாலய ஓட்டம் நடைபெறும். இதையொட்டி குமரி மாவட்டத்திற்கு வருகிற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. எனவே அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களை கொண்டு செயல்படும். 1-ந் தேதி விடப்படும் விடுமுறைக்கு பதிலாக 12-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்