நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை

நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது

Update: 2022-02-24 21:20 GMT
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.
திடீர் மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை முடிவடைந்து வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. கடந்த சில நாட்களாக நண்பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. அதே நேரத்தில் அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவும் காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் நெல்லையில் சாரல் மழை பெய்தது. 9 மணி அளவில் சிறிது நேரம் பலத்த மழையும் பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் நனைந்தபடியே சென்றனர்.
இதேபோல் நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணை பகுதி, அம்பை, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நேற்று பகல் முழுவதும் சூரியனை பார்க்க முடியவில்லை. அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் இன்றி குளிர்ச்சி நிலவியது.
மழை அளவு
நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
அம்பை -7, மணிமுத்தாறு -3, நாங்கு  நேரி -1, பாளையங்கோட்டை -3, பாபநாசம் -9, நெல்லை -3.

மேலும் செய்திகள்