வீட்டில் பதுக்கி வைத்த 4¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது
திருமங்கலத்தில் வீட்டில் பதுக்கி வைத்த 4¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருமங்கலம்,
திருமங்கலத்தில் வீட்டில் பதுக்கி வைத்த 4¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
4¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருமங்கலத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மதுரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து திருமங்கலம் பெரிய கடை வீதியில் உணவு கடத்தல் தடுப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அதே தெருவைச் சேர்ந்த விசுவநாதன் (வயது 47) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் மூடை, மூடையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்்ச்சி அடைந்தனர். 40 கிலோ எடையில் 118 மூடை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 4¾ டன் எடை கொண்ட ரேஷன் அரிசி ஆகும்.
கைது
இதையடுத்து அந்த ரேஷன் அரிசி மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் விசுவநாதனை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.