விவசாய நிலத்துக்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ.3,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

விவசாய நிலத்துக்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ.3,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

Update: 2022-02-24 21:03 GMT
நெல்லை:
நெல்லை மாவட்டம் வெள்ளப்பனேரியைச் சேர்ந்தவர் மனோஜ் (வயது 41). விவசாயியான இவர் தனது விவசாய நிலத்துக்கு இலவச மின் இணைப்பு பெறுவதற்காக, தென்காசி மாவட்டம் பழங்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில் அந்த மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றிய வணிக ஆய்வாளர் மோசே தனக்கு ரூ.3,500 வழங்கினால், இலவச மின் இணைப்பு வழங்குவதாக மனோஜிடம் கூறினார்.
இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத மனோஜ், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் தெரிவித்தார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில், மனோஜ் ரசாயனம் தடவிய ரூ.3,500-ஐ நேற்று பழங்கோட்டை மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று மோசேயிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மோசேயை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்