உக்ரைனில் சிக்கி தவிக்கும் புதுக்கோட்டை மாணவரை மீட்க கோரிக்கை

உக்ரைனில் சிக்கி தவிக்கும் புதுக்கோட்டை மாணவரை மீட்க பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-02-24 19:47 GMT
கீரமங்கலம், 
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் திலீப்குமார், விவசாயி. இவருடைய மகன் அர்ஜூன் (வயது 20). இவர் உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவி நகரில் தங்கி அங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் 4-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இவருடன் தமிழ்நாட்டை சேர்ந்த பல மாணவர்கள் தங்கி உள்ளனர். இந்த நிலையில் ரஷியா போர் தொடுத்து உள்ளதால் ஹீரோவ் ப்ராட்சி மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள சுரங்கப்பாதையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கி உள்ளனர். எனவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு உக்ரைனில் சிக்கி உள்ள தமிழக மாணவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பாதுகாப்பு வழங்கி சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்