பிளஸ்-2 மாணவியை கடத்தியவருக்கு 17 ஆண்டு சிறை

பிளஸ்-2 மாணவியை கடத்தியவருக்கு 17 ஆண்டு சிறை

Update: 2022-02-24 19:24 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி கிருஷ்ணன்கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகண்ணன் என்ற ஞானகுரு(வயது 41). இவர் கடந்த 18.5.2016-ல், பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதற்காக பிளஸ்-2 மாணவி ஒருவரை விருதுநகருக்கு அழைத்து சென்றுள்ளார். 
பின்னர் பஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோரை காத்திருக்க கூறினார். பின்னர் அவர் மாணவியை கடத்தி சென்று விட்டார். இதுகுறித்து அவரது பெற்றோர், விருதுநகர் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் விருதுநகர் போலீசார் மாணவியை மீட்டு ஞானகுருவை கைது செய்தனர். அதன் பிறகு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன், மாணவியை ஏமாற்றி கடத்தி சென்ற ஞானகுருவுக்கு 17 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்