கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பாசி மணிகள்
கீழடியில் பாசி மணிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றது. இதில் பழங்கால தமிழர்களின் வாழ்க்கை நாகரிகம் குறித்தும் மற்றும் செங்கல் கட்டிடங்கள், சுடுமண் உறை கிணறுகள், பெரியபானை உள்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நிலையில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக கீழடியில் 2 குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே ஊதா, பச்சை நிறத்தில் பாசிகளும், யானை தந்தத்தால் ஆன பகடை காயும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணி நடந்த நிைலயில் நேற்று பச்சை, சிவப்பு கலரில் பாசிமணிகள் கிடைத்துள்ளது. மேலும் குழிகள் தோண்டி அகழ்வாராய்ச்சி செய்யும் போது பொருட்கள் அதிக கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.