108 ஆம்புலன்சில் பிறந்த இரட்டை குழந்தைகள்
108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தைகள் பிறந்தன.
சிவகங்கை,
திண்டுக்கல் மாவட்டம், சிந்துகோவில்பட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 30). இவருடைய மனைவி விஜயசாந்தி (27). இவர்கள் திருப்பத்தூரில் வசித்து விறகுவெட்டும் தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான விஜயசாந்திக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். பின்னர் அவரை உயர் சிகிச்சைக்காக 108 ஆம்பு லன்ஸ் மூலம் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். வரும் வழியில் ஆம்பு லன்சிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே சென்ற போது மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற தாயையும் குழந்தை களையும் மேல்சிகிச்சைக்கு சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர். இந்த நிலையில் 108 ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் போதும்பொண்ணு மற்றும் பைலட் மலையரசன் ஆகியோரை அனைவரும் பாராட்டினர்.