மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

கொள்ளிடத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-24 18:34 GMT
கொள்ளிடம்:
 கொள்ளிடம் அருகே உள்ள ஓம் சக்திநகர் குட்டியாவெளி தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது42).இவர் நேற்று முன்தினம் கொள்ளிடம் ரெயில் நிலையம் செல்லும் சாலையின் ஓரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு அங்குள்ள கடைக்கு சென்றார். பின்னர் மீண்டும் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் காணவில்லை. இதுகுறித்து  ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடியதாக கடலூர் மாவட்டம் கருப்பூர் தெற்கு தெருவை சேர்ந்த சீதாராமன் மகன் பொன்மணி (28) என்பவரை கைது செய்து, அவரிடம்  இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்