வாகனம் மோதி கணவன்-மனைவி படுகாயம்
வாகனம் மோதி கணவன்-மனைவி படுகாயம் அடைந்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது40). இவர் தனது மனைவி முனீஸ்வரியுடன் புதிய பஸ்நிலைய பகுதியில் சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் கணவன், மனைவி 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை ஆம்புலன்சில் ஏற்றி ராமநாதபுரம் பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சந்திரசேகர் கொடுத்த புகாரின்பேரில் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் வழக்குப்பதிவு செய்து மோதிய வாகனத்தை தேடிவருகிறார்.