மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-02-24 17:58 GMT
ராமநாதபுரம்.
ராமநாதபுரம் அருகே தொருவளூர் காலனி பகுதியில் ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது அரசு அனுமதி இன்றி ஆற்றுப்படுகை மணலை திருடிச்சென்ற லாரியை மடக்கிப்பிடித்தனர். இந்த மணல் கடத்தலில் ஈடுபட்ட ஆர்.காவனூரை சேர்ந்த காளி முத்து மகன் சவுந்தரராஜன் (வயது 35) என்பவரை கைது செய்தனர். கடத்தல் மணலுடன் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்