வான்நோக்கும் நிகழ்ச்சி
தேசிய அறிவியல் தினத்தையொட்டி, ஒரு வார அறிவியல் திருவிழாவின் நிகழ்ச்சியாக வான்நோக்கும் நிகழ்ச்சி உடுமலையில் நடந்தது. இதில் பொது மக்கள் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
உடுமலை
தேசிய அறிவியல் தினத்தையொட்டி, ஒரு வார அறிவியல் திருவிழாவின் நிகழ்ச்சியாக வான்நோக்கும் நிகழ்ச்சி உடுமலையில் நடந்தது. இதில் பொது மக்கள் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
சுதந்திர தின விழா
இந்தியா சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டு சுதந்திர தினவிழாவை கொண்டாடி வரும் வேளையில், மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறையின் கீழ் இயங்கும் பல்வேறு நிறுவனங்கள், ஒத்துழைப்புடன் பிப்ரவரி 22-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை, ஒரு வாரகாலம் இந்தியா முழுவதும் 75 முக்கிய இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் இந்த வான் நோக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கோவை மண்டலத்தின் சார்பில் கலிலியோ அறிவியல் கழகம் இணைந்து இந்த விழாவை கொண்டாட உள்ளது.
வான்நோக்கும் நிகழ்ச்சி
அதன்படி நேற்று முன்தினம் இரவு வான்நோக்கும் நிகழ்ச்சி உடுமலை செல்லம் நகர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது. இதில் வானவியல் சார்ந்த கருத்துருக்கள், செயல்விளக்கம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள், தொலைநோக்கி மூலம் நட்சத்திர தொகுதிகளைப் பார்த்து ரசித்தனர்.
இந்த நிகழ்ச்சியை உடுமலை, கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கு.கண்ணபிரான், நிர்வாகிகள் கு.சதீஷ்குமார், உடுமலை சுற்றுச்சூழல் சங்க செயலாளர் நாகராஜன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.