திருவலம் அருகே ஓய்வு பெற்ற ராணுவவீரர் வீட்டில் 19 பவுன் நகை திருட்டு

திருவலம் அருகே ஓய்வு பெற்ற ராணுவவீரர் வீட்டில் 19 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

Update: 2022-02-24 17:27 GMT
திருவலம்

திருவலம் அருகே உள்ள சேவூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை செல்வராஜ் வேலைக்கு சென்று விட்டார். இவரது மனைவி ராஜேஸ்வரி வேலூரில் நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

பின்னர் நிச்சயதார்த்தம் முடித்து ராஜேஸ்வரி வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டை யாரோ உடைத்திருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது  பீரோவில் வைத்திருந்த 19 பவுன் நகையை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. 
இதுகுறித்த புகாரின் பேரில் திருவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்