ஆற்றில் மூழ்கி மாணவர் பலி

மங்கலம் அருகே நொய்யல் ஆற்றில் மூழ்கி மாணவர் பலியானார்.

Update: 2022-02-24 17:09 GMT
மங்கலம்
மங்கலம் அருகே நொய்யல் ஆற்றில் மூழ்கி மாணவர் பலியானார். 
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மாணவர்
திருப்பூர் புதுக்காடு பகுதியைச் சேர்ந்த முகமது சாலின் என்பவரின் மகன் யாசர்அராபத் (வயது 17). திருப்பூர் கே.எஸ்.சி.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் தனது பள்ளி நண்பர்களான பிரசாந்த், ஹரிபிரசாத், பரமேஸ்வரன் ஆகியோருடன் நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் மங்கலத்தில் உள்ள நொய்யல் ஆற்றில் குளிக்க சென்றார். பின்னர் 4 பேரும் ஆற்றில் இறங்கி குளித்தனர்.
அப்போது யாசர் அராபத் மட்டும் நொய்யல் ஆற்றின்  ஒரு பகுதியிலிருந்து மறுபுறத்திற்கு நீந்தி சென்றதாக  கூறப்படுகிறது.  அதன்பின்னர் அவரை காணவில்லை. இதையடுத்து அவருடைய நண்பர்கள் அவரை தேடினர். ஆனாலும் அவரை கண்டு பிடிக்கமுடியவில்லை. 
தண்ணீரில் மூழ்கி பலி
இதைடுத்து மங்கலம் போலீசாருக்கும்,  அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த அவினாசி தீயணைப்பு நிலைய அதிகாரி தலைமையிலான வீரர்கள் நொய்யல் ஆற்றில் இறங்கி யாசர் அராபத்தை தேடினர். 
அப்போது தண்ணீருக்குள் இறந்த நிலையில் யாசர்அராபத்தை கிடந்தார். இதையடுத்து யாசர் அராபத் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.பின்னர் யாசர் அராபத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் குளிக்கும் போது பள்ளி மாணவர்  தண்ணீருக்குள் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்