சாராயம் விற்ற 2 பேர் கைது
கீழ்வேளூரில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் போலீஸ் சரகம் காருதாக்குடி, பெரியாச்சி கோவில் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், பாலையூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கலியபெருமாள் (வயது 65) என்பதும், அவர் அந்த பகுதியில் சாராயம் விற்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கலிய பெருமாளை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதே போல் புதுச்சேரி ஊராட்சி விக்னாபுரம் மேலத்தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த பிச்சைகண்ணு மகன் சரவணன் (33) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.