அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகையில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-24 16:46 GMT
நாகப்பட்டினம்:
 நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தங்கமணி கலந்து கொண்டு பேசினார். கடந்த 6 மாதங்களாக நாகை உதவி திட்ட அலுவலர் களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் அந்துவன் சேரல் நன்றி கூறினார். இதில் அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்