கஞ்சா விற்றவர் சிக்கினார்
சின்னமனூரில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
தேனி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையில் போலீசார் சின்னமனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள காந்தி சிலை அருகில் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தவரை பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில் 2 கிலோ 400 கிராம் கஞ்சா இருந்தது.
விசாரணையில் அவர், தேனியை அடுத்த அன்னஞ்சி இந்திரா காலனியை சேர்ந்த சந்திரன் மகன் ஜெயராஜ் (வயது 36) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஜெயராஜை கைது செய்தனர்.