பள்ளி பருவத்திலேயே சேமிக்கும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்

பள்ளி பருவத்திலேயே சேமிக்கும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் கூறினார்.

Update: 2022-02-24 16:27 GMT
திருவாரூர்:
பள்ளி பருவத்திலேயே சேமிக்கும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் கூறினார்.
வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
உலக சிக்கன நாள் விழாவை முன்னிட்டு சிறுசேமிப்பின் முக்கியத்துவத்தினை உணர்த்திடும் பொருட்டு மாவட்ட அளவில் பள்ளிகளிடையே நடத்தப்பட்ட கட்டுரை, கவிதை மற்றும் பேச்சு போட்டி, சிறுசேமிப்பு விழிப்புணர்வு சொற்றொடர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக சிக்கன நாள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் பரிசுகளை வழங்கினார். மேலும் 2020-21-ம் ஆண்டில் மாவட்ட அளவில் சிறுசேமிப்பு வசூலில் சாதனை புரிந்து முதலிடம் பெற்ற நிலை முகவர் மற்றும் மகளிர் முகவர்களுக்கு கேடயம் வழங்கினார்.
சேமிக்கும் பழக்கத்தை 
அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பள்ளி பருவத்திலேயே சேமிக்கும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். சிக்கனத்தை கடைபிடித்து சேமிப்பு என்பதை அனைவரும் அறிந்து கொண்டு செயல்பட வேண்டும். இந்த சேமிப்பு எதிர்காலத்தில் பயன் தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட கலெகடரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) விஜயலெட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
---

மேலும் செய்திகள்