பறவைக்காவடி எடுத்து வந்த வால்பாறை பக்தர்கள்

பழனி முருகன் கோவிலுக்கு பறவைக்காவடி எடுத்து வால்பாறை பக்தர்கள் வந்தனர்.

Update: 2022-02-24 16:23 GMT
பழனி:

கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் 100-க்கும் மேற்பட்டோர், பழனி முருகன் கோவிலுக்கு நேற்று பாதயாத்திரையாக வந்தனர். முன்னதாக அந்த குழுவை சேர்ந்த 9 பக்தர்கள், சண்முக நதியில் இருந்து பறவைக்காவடி எடுத்து கோவிலுக்கு வந்தனர்.

ராட்சத கிரேன் மூலம் பறவைக்காவடி எடுத்த பக்தர்கள் பழனி காரமடை, நால்ரோடு சந்திப்பு, புது தாராபுரம் சாலை, குளத்துரோடு, திருஆவினன்குடி என பழனி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பழனி முருகன் கோவிலை வந்தடைந்தனர். 

காண்போரை பிரமிக்க வைக்கும் வகையில், ராட்சத கிரேனில் தொங்கியபடி வந்த பறவைக்காவடியை பொதுமக்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதேபோல் சில பக்தர்கள் அலகு குத்தியும் கோவிலுக்கு வந்தனர். 

கடந்த 46 ஆண்டுகளாக வால்பாறை பகுதியில் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வந்து பறவைக்காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி முருகப்பெருமானை தரிசித்து வருவதாக வால்பாறை பக்தர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்