தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் கிராமத்தில் தனியார் கம்பெனி ஒன்று உள்ளது. இங்கு மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த நாகேந்திர கோல் (வயது 29) என்பவர் அங்கேயே வாடகைக்கு அறை எடுத்து தங்கி கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றும் இதுநாள் வரையிலும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. நேற்று முன்தினம் மீண்டும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது.
வயிற்று வலி தாங்க முடியாத அவர்் தன்னுடைய அறையில் யாருமில்லாத சமயத்தில் அங்குள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.