கற்றல், கற்பித்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் கண்காட்சி
கற்றல், கற்பித்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் கண்காட்சி
வால்பாறை
வால்பாறையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தங்களது கற்றல், கற்பித்தல் உபயோக பொருட்கள் குறித்த கண்காட்சியை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடத்தினர். இதை வட்டார கல்வி அலுவலர் வெள்ளிங்கிரி தொடங்கி வைத்தார். அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜாராம் முன்னிலை வகித்தார். 159 இல்லம் தேடி கல்வித்திட்ட மையங்களில் 120 குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த தொடக்க நிலை மற்றும் உயர் நிலை மாணவ-மாணவிகளுக்கு தன்னார்வலர்கள் கற்பித்தலுக்காக தாங்கள் பயன்படுத்தும் முறைகளையும், அதற்கான கற்பித்தல் உபகரணங்களையும் கொண்டு கண்காட்சியை நடத்தினார்கள்.
இதில் வால்பாறை நகர் பகுதியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் சுனில்லால் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை பயிற்சிக்கான ஆசிரியர்கள் ராஜேந்திரன், அருணா, டெய்சி, ஜெயலட்சுமி ஆகியோர் அளித்தனர்.