தூத்துக்குடி-ஓகா விவேக் வாராந்திர விரைவு ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்

தூத்துக்குடி, ஓகா விவேக் இடையேயான வாராந்திர விரைவு ரெயில் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

Update: 2022-02-24 13:42 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி-ஓகா விவேக் வாராந்திர விரைவு ரெயில் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
ரெயில் பாதை  பராமரிப்பு
பெங்களூரு அருகே மலுகூரில் ரெயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. எனவே அந்தப் பகுதியில் இயங்கும் ரெயில் சேவையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பிப்ரவரி 25, மார்ச் 4 ஆகிய நாட்களில் குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து புறப்படும் ஓகா - தூத்துக்குடி விவேக் விரைவு ரெயில் (19568) குண்டக்கல், கடப்பா, ரேணிகுண்டா, ஜோலார்பேட்டை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
தூத்துக்குடியில் இருந்து...
அதே போன்று நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் மார்ச் 6, 13 ஆகிய நாட்களில் தூத்துக்குடியில் இருந்து புறப்படும் தூத்துக்குடி - ஓகா விவேக் வாராந்திர விரைவு ரெயில் (19567) ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா, கடப்பா, குண்டக்கல் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
இந்த தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்