பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர்
ஆம்பூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர்
ஆம்பூர்
ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சமூக அறிவியல் பாடத்தில் மாநில அரசின் செயல்பாடு குறித்த பாடத்தினை கலெக்டர் கற்பித்தார்.
அப்போது மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் துரை, ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.