வாழ்க்கையில் சுயமாக முன்னேறிய திருநங்கைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசுடன் விருது: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-02-24 11:07 GMT
செங்கல்பட்டு மாவட்டம் சமூக நல துறையின் சார்பில் 3-ம் பாலினத்தவரை கவுரவிக்கும் வகையில் 2021-22-ம் ஆண்டு திருநங்கையர் தினமான ஏப்ரல் 15-ந் தேதி அன்று முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. விருதுக்கு விண்ணப்பிவர்கள் பின்வரும் தகுதியுடைவர்களாக இருத்தல் வேண்டும். 3-ம் பாலினத்தவர் அரசு உதவி பெறாமல் தானாக சுயமான வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 மூன்றாம் பாலினத்தவருக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். 3-ம் பாலினத்தவர் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது.

மேலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தங்கள் சாதனைகளை உரிய தகவல்களுடன் அளித்து அதற்கான சான்றுகளை, நகல்களுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 3-ம் பாலினத்தினர் முன்மாதிரி விருதுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்று வழங்கப்படும். மேற்காணும் தகுதிகள் உடைய 3-ம் பாலினத்தவர்கள் 28-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (awards.tn.gov.in.) விண்ணப்பித்து மற்றும் ஒரு கருத்துருவினை மாவட்ட சமூக நல அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை கட்டிடம் முதல் தளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 85, ஆலப்பாக்கம், செங்கல்பட்டு என்ற முகவரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்