நெடுஞ்சாலைத்துறை ஊழியர் மீது தாக்குதல்

மதுரையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர் மீது தாக்குதல் நடந்தது.

Update: 2022-02-23 21:24 GMT
மதுரை,

மதுரை சர்வேயர்காலனி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்ராஜன் (வயது 41). இவர் நெடுஞ்சாலை துறையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், இவரது வீட்டின் அருகே வசித்து வரும் சுபாஷினி என்பவருக்கும் இடையே குப்பை எரிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்தநிலையில், சம்பவத்தன்று, வீட்டின் அருகே பழனிவேல்ராஜன் நடந்து வந்தபோது, அங்கு வந்த சுபாஷினி உள்ளிட்ட 8 பேர், அவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சுபாஷினி உள்ளிட்ட 8 பேர் மீது திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்