போலீஸ்காரரை தாக்கிய 2 பேர் கைது
குலசேகரம் அருகே ஏட்டை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குலசேகரம்,
குலசேகரம் அருகே ஏட்டை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
போலீஸ் ஏட்டு
குலசேகரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிபவர் மகேஷ் (வயது 35) இவர் கடந்த திங்கட்கிழமை இரவு பொன்மனை அருகே கிழக்கம்பாகம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் குளச்சவிளாகம் பகுதியை சேர்ந்த சதீஸ் (29) மற்றும் விஜயகுமார் (39) ஆகியோர் வந்தனர். அவர்களை மகேஷ் தடுத்து நிறுத்தினார்.
தாக்குதல்
அப்போது சதீஸ், விஜயகுமார் ஆகியோர் ஏட்டு மகேஷிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸ் ஏட்டு மகேஷை தாக்கியதுடன், அவரின் மர்ம உறுப்பையும் காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் இருந்து போலீசார் விரைந்து சென்று சதீஷ், விஜயகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த போலீஸ் ஏட்டு மகேஷ் குலசேகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.