பஸ்சில் ஆபத்தான மேற்கொள்ளும் மாணவர்கள்

வேப்பனப்பள்ளி பகுதியில் பஸ்சில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். எனவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-23 21:03 GMT
வேப்பனப்பள்ளி:-
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். எகடதம்பள்ளி, முஸ்லிபூர், மாதேப்பள்ளி, பந்திகுறி, ஏரிகரை, அத்திகுண்டா, தடதாரை ஆகிய கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் காலை, மாலை நேரலங்களில் பஸ்சில் பள்ளிக்கு வருவது வழக்கம். இந்த பகுதியில் போதுமான பஸ்கள் இயக்கப்படாததால் மாணவ- மாணவிகள் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணிக்கின்றனர். அவர்களது ஆபத்தான பயணம் பெற்றோர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாணவ- மாணவிகளின் நலன் கருதி அந்த கிராம பகுதிகளில் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்