தபால் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

சிப்காட் அருகே தபால் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-23 19:37 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே உள்ள மேட்டுத்தெங்கால் பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (வயது25). இவர் திருவலம் அருகே உள்ள சேவூர் தபால் அலுவலகத்தில்  ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பிணத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்