ராமநாதபுரம், ராமேசுவரம் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு

ராமநாதபுரம், ராமேசுவரம் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு

Update: 2022-02-23 19:29 GMT
ராமநாதபுரம்
தமிழகத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் இருந்து பனிப்பொழிவு தொடங்குவதுடன் மார்கழி மற்றும் தை மாதம் வரையிலும் பனியின் தாக்கம் இருக்கும். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு கார்த்திகை, மார்கழி, தை மாதங்களை விட மாசி மாதமான தற்போது பனியின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகின்றது. குறிப்பாக ராமநாதபுரம் நகர் பகுதியில் இரவு 11 மணி முதல் காலை 8 மணி வரையிலும் பனியின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. அதிலும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் கூட கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு புகை மூட்டம் போல் பனியின் தாக்கம் சூழ்ந்து காணப்படுகின்றது. இதேபோல் உச்சிப்புளி, மண்டபம் ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதியிலும் கடந்த சில நாட்களாகவே பனியின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்து வருகின்றது. மாசி பனி மாடி வீட்டை துளைக்கும் என்ற பழமொழிக்கு ஏற்றால் போல் தற்போது நடந்து வரும் மாசி மாதத்தில் பனிப் பொழிவின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகின்றது. ஒருபுறம் காலை 8 மணிவரை பனிப் பொழிவு அதிகம் இருந்து வரும் நிலையிலும் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்