தமிழக மீனவர்கள் 6 பேரை நடுக்கடலில் கைது செய்த இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் 6 பேரை நடுக்கடலில் கைது செய்த இலங்கை கடற்படை

Update: 2022-02-23 19:28 GMT
ராமேசுவரம்
தமிழகத்தை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று விசைப்படகுகளில் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்த ஒரு படகு மற்றும் 6 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்தவர்களா அல்லது தமிழகத்தின் வேறு ஏதேனும் ஊரைச் சேர்ந்தவர்களா என்பது குறித்த விவரம் தெரியவில்லை. இதுகுறித்து இன்று அதிகாரப்பூர்வமாக தெரியவரும் என்றும் கூறப்படுகின்றது.

மேலும் செய்திகள்