திருச்சி முகாம் சிறையில் 6 கைதிகள் திடீர் உண்ணாவிரதம்

திருச்சி முகாம் சிறையில் 6 கைதிகள் திடீர் உண்ணாவிரதம்

Update: 2022-02-23 19:16 GMT
கே.கே.நகர், பிப்.24-
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கை, வங்காளதேசம், ரஷியா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இலங்கை அகதிகள் சிலர் சிறையில் அடைக்கபட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், அவர்களுக்கான தண்டனை காலம் முடிவடைந்ததால் தங்களை விடுதலை செய்யக்கோரி இலங்கை தமிழர்கள் 6 பேர் முகாம் சிறை வளாகத்தில் நேற்று காலை முதல் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட உணவையும் அவர்கள் சாப்பிட மறுத்து விட்டனர். இது பற்றி தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாங்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வருகிறோம். இதுவரை எங்களை விடுதலை செய்யவில்லை. ஆகையால் எங்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இலங்கை தமிழர்கள் உண்ணாவிரத போராட்டத்தால் முகாம் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்