அ.தி.மு.க. வேட்பாளர்கள் 26 பேர் டெபாசிட் இழப்பு

தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் 26 பேர் டெபாசிட் இழந்தனர்.

Update: 2022-02-23 17:52 GMT
தேனி: 

தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது. அ.தி.மு.க. கோட்டையாக திகழ்ந்த நகராட்சி பகுதிகளில் தி.மு.க. அபார வெற்றி பெற்றுள்ளது. மாவட்டத்தில் நகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களில் 26 பேர் டெபாசிட் தொகையை இழந்தனர். 

அதில் கம்பத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேர், கூடலூரில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 2 பேர், சின்னமனூரில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 3 பேர், தேனி அல்லிநகரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேர், பெரியகுளத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 5 பேர், போடியில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 4 பேர் டெபாசிட் தொகையை இழந்தனர். 

அதுபோல், சின்னமனூரில் தி.மு.க. வேட்பாளர் ஒருவர், போடியில் தி.மு.க. வேட்பாளர்கள் 2 பேர் என மாவட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் 3 பேரும் டெபாசிட் இழந்தனர். அதுபோல், மாவட்டத்தில் நகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்ட அ.ம.மு.க. வேட்பாளர்கள் 68 பேர், பா.ஜ.க. வேட்பாளர்கள் 56 பேர், நாம் தமிழர் வேட்பாளர்கள் 44 பேர், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் 44 பேர், சுயேச்சைகள் 110 பேர் டெபாசிட் தொகையை இழந்தனர். 

மேலும், தே.மு.தி.க., பா.ம.க., எஸ்.டி.பி.ஐ. கட்சிகளின் சார்பில் களம் இறங்கிய வேட்பாளர்கள் பலரும் டெபாசிட் இழந்தனர். அதேநேரத்தில், சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவிய வேட்பாளர்களில் 23 பேர் கணிசமான வாக்குகள் வாங்கியதுடன் டெபாசிட் தொகையை பெற்றனர்.

மேலும் செய்திகள்