கீழப்பனையூர் காமாட்சி அம்மன் கோவில் தெப்ப உற்சவம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

கீழப்பனையூர் காமாட்சி அம்மன் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-02-23 17:38 GMT
அரிமளம்:
காமாட்சி அம்மன் கோவில் 
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் கீழப்பனையூர் கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி காமாட்சியம்மன் கோவில் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி காமாட்சி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. 
தெப்பத்தில்... 
இதைதொடர்ந்து காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினார். தெப்பத்தில் மூன்று முறை அம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்