சிக்கல்;
கீழ்வேளூர் அருகே இலுப்பூர்- பாப்பாக்கோவில் சாலையில் கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரி ஊராட்சி விக்கினாபுரம் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் விக்கினாபுரம் கீழத்தெருவை சேர்ந்த செந்தில்குமார் (வயது42), புதுச்சேரி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த தங்கையன்(54), விக்கினாபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ராமையன் (56) என்றும் அவர்கள் சாராயம் விற்றதும் தெரியவந்தது. இது குறித்து கீழ்வேளுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.