நாங்கூர் செம்பொன் அரங்கர் கோவிலில் சிறப்பு வழிபாடு
சுவாதி நட்சத்திரத்தையொட்டி நாங்கூர் செம்பொன் அரங்கர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே நாங்கூர் கிராமத்தில் 108 வைணவ திவ்யதேச கோவில்களில் ஒன்றாக செம்பொன் அரங்கர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் நேற்று முன்தினம சுவாதி நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு பெருமாளுக்கு பால், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்த ஜனசபை தலைவர் ரகுநாதன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.