73 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கருவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டன

வால்பாறையில் தேர்தலுக்கு பயன்படுத்திய 73 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அரசு கருவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

Update: 2022-02-23 16:35 GMT
வால்பாறை

வால்பாறையில் தேர்தலுக்கு பயன்படுத்திய 73 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அரசு கருவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

வாக்கு எண்ணும் பணி

வால்பாறை நகராட்சியில் 21 வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி ைய தொடர்ந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் தேர்தலுக்காக வால்பாறை நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த 73 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 73 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு வாக்கு எண்ணும் பணி நடந்தது. 

73 எந்திரங்கள்

தொடர்ந்து அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்தலுக்கு பயன்படுத்திய 73 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சாவடிகளில் அலுவலர்கள் பயன்படுத்திய படிவங்கள், பதிவான வாக்கு விவரங்கள், முகவர்களிடம் பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள், 

வாக்குச்சாவடிகளில் பணிபுரிந்த அலுவலர்கள் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமார் தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெங்கடாசலம், செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் பெட்டிகளில் அடைக்கப்பட்டது. பின்னர் சீல் வைத்து கோவையில் உள்ள அரசு கருவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் செய்திகள்