லெட்சுமாங்குடி கடைவீதி சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

லெட்சுமாங்குடி கடைவீதி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஒரு வழி பாதை அமைத்து தர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-02-23 15:32 GMT
கூத்தாநல்லூர்:
லெட்சுமாங்குடி கடைவீதி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஒரு வழி பாதை அமைத்து தர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
லெட்சுமாங்குடி கடைவீதி 
கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடி கடைவீதியில் சாலையையொட்டி திருவாரூர், மன்னார்குடி, கொரடாச்சேரி, வடபாதிமங்கலம் ஆகிய 4 வழி பிரிவு சாலை உள்ளது. இந்த நான்கு வழி சாலையிலும் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி, கொரடாச்சேரி, குடவாசல், கும்பகோணம் போன்ற முக்கிய ஊர்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் லெட்சுமாங்குடி கடைவீதி சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாக விளங்குகிறது. 
போக்குவரத்து நெரிசல்
லெட்சுமாங்குடி கடைவீதி சாலை குறுகலான சாலையாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. லெட்சுமாங்குடி கடைவீதி சாலையில் போக்குவரத்து நெரிசலில்  வாகனங்கள் அடிக்கடி கடந்து செல்ல முடியாமல் சிக்கி கொள்கிறது. இதனால்  பஸ்களில் பயணம் செய்வோர், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை இருந்து வருகிறது.
ஒரு வழி பாதை அமைக்க வேண்டும்
மேலும் வாகனங்கள் பல மணி நேரம் கடந்து செல்ல முடியாமல் ஒரே இடத்தில் நின்று விடுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகள் சிரமங்கள் அடைந்து வருகின்றனர். இதற்கு தீர்வு காண ஒரு வழி பாதை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லெட்சுமாங்குடி கடைவீதி சாலையில் ஒரு வழி பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்