தினத்தந்தி புகார் பெட்டி

நாகை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

Update: 2022-02-23 15:18 GMT
வேகத்தடை வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள திருமணஞ்சேரி மாரியம்மன் கோவில் அருகில் ஆபத்தான வளைவு உள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சாலை வளைவுகளில் வேகத்தடை அமைத்தால் வாகன ஓட்டிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். கோவிலுக்கு வரும் வாகனங்கள் அதிவேகமாக வருகின்றன. இதனால் விபத்துக்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருமணஞ்சேரி.

மேலும் செய்திகள்