புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க வேண்டும்
மன்னார்குடியில் இருந்து களப்பால் வரை புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க வேண்டும் என்று கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோட்டூர்:
மன்னார்குடியில் இருந்து களப்பால் வரை புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க வேண்டும் என்று கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து வசதி இல்லை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து கோட்டூர், கோமாளப்பேட்டை, கருப்புகிளார், கறம்பக்குடி, அக்கரைக்கோட்டகம் வழியாக களப்பால் வரை போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்து வந்தது. தற்போது அதில் சாலை அமைக்கப்பட்டும் பஸ் வசதி இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ - மாணவிகள், வியாபாரிகள், ஆஸ்பத்திரி மற்றும் பணிகளுக்காக மன்னார்குடி, கோட்டூர் செல்லக்கூடிய பொதுமக்கள் காலத்தோடு பணிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள்.
பஸ் இயக்க வேண்டும்
எனவே மன்னார்குடியில் இருந்து களப்பால் வரை புதிய வழித்தடத்தில் உடனடியாக பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
----