தொழிலாளி மீது தாக்குதல்: 2 வாலிபர்கள் கைது

தூத்துக்குடியில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-02-23 14:38 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி எஸ்.எம்.புரத்தை சேர்ந்தவர் முருகையா. இவருடைய மகன் சரவணக்குமார் (வயது 30). இவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த, மற்றொரு வேட்பாளரின் ஆதரவாளரான எஸ்.எம்.புரத்தை சேர்ந்த மரியதாஸ் மகன் ஜூடு மார்சல் அஸ்வின் (22), போல்டன்புரம் 3-வது தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் ஆரோக்கிய ஜெகன் (23) ஆகியோர் வீட்டில் இருந்த சரவணக்குமாரை சரமாரியாக தாக்கினார்களாம். இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து ஜூடு மார்சல் அஸ்வின், ஆரோக்கிய ஜெகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

மேலும் செய்திகள்