சுரண்டை அருகே மனைவி பிடித்து தள்ளியதில் சவரத்தொழிலாளி சாவு
மனைவி பிடித்து தள்ளியதில் சவரத்தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
சுரண்டை:
சுரண்டை அருகே வீரகேரளம்புதூர் மேலத்தெருவை சேர்ந்த முத்தையா மகன் மாரியப்பன் (வயது 55). சவரத்தொழிலாளி. இவர் தினசரி குடித்துவிட்டு அவரது மனைவி பார்வதியிடம் (50) தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் மாரியப்பன் குடிபோதையில் வீட்டுக்கு வந்து பார்வதியிடம் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது பார்வதி அவரை பிடித்து தள்ளியதில் மாரியப்பன் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் முகத்தில் பலத்த காயம் அடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் வீரகேரளம்புதூர் சப்-இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி விரைந்து வந்து மாரியப்பனின் உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து வீரகேரளம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுரண்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.