தஞ்சை மாவட்டத்தில் 2 மாநகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2 மாநகராட்சிகளையும் தி்.மு.க. கைப்பற்றியது.

Update: 2022-02-22 21:23 GMT
தஞ்சாவூர்:-

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2 மாநகராட்சிகளையும் தி்.மு.க. கைப்பற்றியது. 

தஞ்சை மாநகராட்சி

தஞ்சை, கும்பகோணம் மாநகராட்சிகளுக்கு தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்தது.. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தஞ்சை மாநகராட்சியில் பதிவான வாக்குகள் தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் எண்ணப்பட்டன. 
தஞ்சை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 51 வார்டுகளில் தி.மு.க. 34 வார்டுகளிலும், அ.தி.மு.க. 7 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன. 
தஞ்சை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 51 வார்டுகளில் 34 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்று உள்ளதால் தஞ்சை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. 

வார்டு இறுதி நிலவரம்

மொத்த வார்டுகள் - 51
தி.மு.க. - 34
அ.தி.மு.க. - 7
காங்கிரஸ் - 2
பா.ஜனதா - 1
அ.ம.மு.க. - 1 
மா.கம்யூனிஸ்டு - 1
ஐ.யூ.எம்.எல். - 1
ம.தி.மு.க. - 1
விடுதலை சிறுத்தைகள் - 1
சுயேச்சைகள் - 2.

கும்பகோணம் மாநகராட்சி

கும்பகோணம் மாநகராட்சியில் பதிவான வாக்குகள் கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 48 வார்டுகளில் தி.மு.க. 38 வார்டுகளிலும், அ.தி.மு.க. 3 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். 
கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 48 வார்டுகளில் தி.மு.க. 38 இடங்களில் வெற்றி பெற்று உள்ளதால் கும்பகோணம் மாநகராட்சியை தி.மு.க. எளிதாக கைப்பற்றி உள்ளது.

வார்டு இறுதி நிலவரம்

மொத்த வார்டுகள் - 48
தி.மு.க. - 38
அ.தி.மு.க. - 3
காங்கிரஸ் - 2
மா.கம்யூ. - 1
ஐ.யூ.எம்.எல். - 1
சுயேச்சைகள் - 3.

மேலும் செய்திகள்