உசிலம்பட்டி நகராட்சி வார்டில் ஒரே ஒரு ஓட்டு வாங்கிய பா.ஜனதா ெபண் வேட்பாளர்

உசிலம்பட்டி நகராட்சி வார்டில் பா.ஜனதா ெபண் வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டு வாங்கினார்.

Update: 2022-02-22 20:52 GMT
உசிலம்பட்டி, 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி 9-வது வார்டில் பா.ஜனதா சார்பில் வேட்பாளர் இன்பவள்ளி போட்டியிட்டார். இந்த வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்ததால், அவர் உள்பட மொத்தம் 5 பெண்கள் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் தேவசேனா 247 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் ஜெயந்தி 210 ஓட்டுகளும், அ.ம.மு.க. வேட்பாளர் ஒச்சம்மாள் 16 ஓட்டுகளும், சுயேச்சை வேட்பாளர் ஜெயலட்சுமி 6 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். பா.ஜனதா வேட்பாளர் இன்பவள்ளி ஒரே ஓட்டு மட்டுமே பெற்றுள்ளார். இன்பவள்ளிக்கு அவர் செலுத்திய ஓட்டு மட்டுமே கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதே போல் உசிலம்பட்டி நகராட்சி 16-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் வரதராஜன், 21-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் சந்திராதேவி, 22-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் நித்யா ஆகியோரும் தலா 1 ஓட்டுக்களே பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்