ஊத்தங்கரை பேரூராட்சியை 36 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றிய தி.மு.க.
ஊத்தங்கரை பேரூராட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று 36 ஆண்டுகளுக்கு பிறகு தலைவர் பதவியை கைப்பற்றியது.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை பேரூராட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று 36 ஆண்டுகளுக்கு பிறகு தலைவர் பதவியை கைப்பற்றியது.
ஊத்தங்கரை பேரூராட்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 7 ஆயிரத்து 978 ஆண் வாக்காளர்களும், 8 ஆயிரத்து 586 பெண் வாக்காளர்களும், திருநங்கைகள் 16 ஓட்டுகளும் என மொத்தம் 16 ஆயிரத்து 550 வாக்காளர்கள் உள்ளனர்.
இங்கு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, தே.மு.தி.க., சுயேச்சைகள் என மொத்தம் 97 பேர் போட்டியிட்டார்கள். இதில் 11 ஆயிரத்து 567 பேர் வாக்களித்தனர். நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முதலில் தபால் வாக்குகளும், அதைத்தொடர்ந்து மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.
இதில் 12 வார்டுகளில் தி.மு.க.வும், அ.தி.மு.க., பா.ம.க., சுயேச்சை தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர். இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வெற்றி பெற்ற 9 பெண் கவுன்சிலர்களில் 8 பேர் தி.மு.க.வினர், ஒருவர் அ.தி.மு.க. வேட்பாளர் ஆவார்.
வார்டு வாரியாக வெற்றிபெற்றவர்கள் விவரம் வருமாறு:-
முதல் வார்டு (தி.மு.க. வெற்றி)
சுமித்ரா (தி.மு.க.) - 414
பழனி (அ.தி.மு.க.) - 396
2-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
கனகேஸ்வரி (தி.மு.க.) - 285
சம்பூரணம் (அ.தி.மு.க.) - 224
3-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மோகன் (தி.மு.க.) - 281
கண்ணன் (சுயே) - 276
ஜெயபிரகாஷ் (அ.தி.மு.க.) - 196
துரை (தே.மு.தி.க.) - 0
4-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
கலைமகள் (தி.மு.க.) - 462
சமிம்ஜா (அ.தி.மு.க.) - 346
5-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
கதிர்வேல் (தி.மு.க.) - 410
சிவானந்தம் (அ.தி.மு.க.) - 304
6-வது வார்டு (சுயேச்சை வெற்றி)
சிவன் (சுயே) - 260
மணி (அ.தி.மு.க.) - 250
செல்வராணி (வி.சி.க) - 242
7-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
அபிபுன்னிசா (தி.மு.க.) - 349
சரஸ்வதி (அ.தி.மு.க.) - 252
8-வது வார்டு (அ.தி.மு.க.வெற்றி)
கல்பனா (அ.தி.மு.க.) - 273
மலர்விழி (காங்கிரஸ்) - 272
லோகேஸ்வரி (பா.ஜனதா) - 73
9-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
ஷாகிரா பேகம் (தி.மு.க.) - 475
அம்பிகா (ம.ம.க.) -165
பானுஅமிதா (அ.தி.மு.க.) - 146
10-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
நிர்மலா (தி.மு.க.) - 421
ராமி (அ.தி.மு.க.) - 214
பூங்கொடி (சுயே) - 102
11-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மணிமேகலை (தி.மு.க.) - 197
கோமதி (சுயே) -195
சந்தியா (அ.தி.மு.க.) - 94
12-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
கவிதா (தி.மு.க.) - 438
தனம் (அ.தி.மு.க.) - 205
13-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
ஸ்ரீராமன் (தி.மு.க.) - 485
பழனியப்பன் (அ.தி.மு.க.) - 268
14-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
அமானுல்லா (தி.மு.க.) - 388
ஆறுமுகம் (அ.தி.மு.க.) - 202
15-வது வார்டு (பா.ம.க. வெற்றி)
குமரேசன் (பா.ம.க.) - 681
ஆதிம் (சுயே) - 99.